முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் நுழைவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. டோலவத்த தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக தேசிய முன்னணியில் (சிலிண்டர்) இருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்களில் ஒருவர் பதவி விலகி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாய்ப்பளிப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி உட்பட புதிய ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க அல்லது பைசர் முஸ்தபா ஆகியோரிடமிருந்து யார் பதவி விலகுவது என்பதை கூட்டாக முடிவு செய்வார்கள் என்றும் டோலவத்த கூறியுள்ளார்.
சரியான நேரம்
இது தொடர்பாக, பிரேமநாத் சி. டோலவத்த மேலும் கூறியதாவது:
“ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட வாக்குகள் காரணமாக சிலிண்டர் 2 மில்லியன் வாக்குகளைப் பெற்றது.
பொதுத் தேர்தலில் சிலிண்டர் 2 தேசியப் பட்டியல்களைப் பெற்றது, ஏனெனில் ரணில் விக்ரமசிங்க அதை வழிநடத்தினார்.
அவர் ஒரு சிறந்த ஜனநாயகவாதி. ஜனநாயகத்தை வழிநடத்திய ஒருவர். அவர் நாடாளுமன்றத்திற்கு வர இதுவே சரியான நேரம். ” என்றார்.