சினிமா நடிகர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தற்போதைய அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கடந்த ஆட்சிகளை விட 100 வீதம் சிறந்தது என்று தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் மீது பொய்யுரைப்பதாக அல்லது பிரச்சாரங்களை மேற்கொள்வதாக சிலர் குற்றம் சாட்டினாலும், அவை குற்றங்கள் இல்லை என ரஞ்சன் ராமநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
மோசமான செயற்பாடு எதுவுமில்லை
அத்துடன், முந்தைய ஆட்சிகளுடன் ஒப்பிடுகையில், இந்த நிர்வாகம் வீழ்த்தப்பட வேண்டிய அளவிற்கு எந்தவொரு மோசமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்


