ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு நாடு முழுவதிலும் தொகுதி அமைப்பாளர்கள்
உள்ளனர், அவர்களில் ஒருசிலரின் பதவி விலகலால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும்
இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும
பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஆசனங்களைப் பகிர்வதில் ஏற்பட்ட மனவிரக்தி
அவர் மேலும் தெரிவிக்கையில், நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த போனஸ் ஆசனங்களைப் பகிர்வதில் ஏற்பட்ட மனவிரக்தியில் கட்சியின் தொகுதி
அமைப்பாளர்களில் ஒருசிலர் பதவி விலகியுள்ளனர்.

இந்த பிரச்சினை ஏனைய
கட்சிகளிலும் ஏற்படும். எனவே, ஒருசிலரின் பதவி விலகலால் கட்சிக்கு எந்தப்
பாதிப்பும் இல்லை.
இந்தப் பிரச்சினைக்குக் கட்சியின் தலைமை தீர்வு காணும்
நடவடிக்கையில் இறங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

