2024 நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொட பேரணியில் கலந்து கொள்வது குறித்து, தமது
கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்
ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இறுதி முடிவு சில நாட்களில் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்
அத்துடன் இந்த விடயம் இன்று கட்சியின் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்
என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேராணியில் பங்கேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

