முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிர்ஷ்டம் கிட்டவுள்ள ராசிக்காரர்கள்! இன்றைய ராசி பலன்கள்

இன்று மங்கலகரமான குரோதி வருடம் சித்திரை 21 ஆம் நாள் (2024 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள்).

ஒவ்வொரு நாளையும் தொடங்க முன்னர் அந்த நாளுக்கான ராசி பலனை அறிந்து கொள்வதன் மூலம், அந்த நாள் ஒருவருக்கும் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இதற்கமைய, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம் மற்றும் திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.       

மேஷம்

இந்த ராசிக்காரருக்கு பலன்கள் திருப்தி அளிக்காது. ஆன்மீக காரியங்களில் ஈடுபடுங்கள். பக்திப் பாடல்கள் மற்றும் சொற்பொழிவுகள் கேட்பதன் மூலம் மன ஆறுதல் கிடைக்கும். இதனால் அமைதி கிடைக்கும். பணியிடச் சூழல் சுமூகமாக காணப்படாது. உங்கள் செயல்திறனுக்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையுடன் அகந்தைப் பிரச்சினை காணப்படும். இது இருவருக்கும் இடையேயான உறவை பாதிக்கும் என்பதால் இத்தகைய உணர்வை தவிர்க்க வேண்டும். பணப்புழக்கம் போதிய அளவு காணப்படாது. அதிக செலவுகள் காணப்படும். அதை உங்களால் நிர்வகிக்க இயலாது. பாதங்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. உடற்பயிற்சியும் மருத்துவமும் குணமடைய உதவும்.

குரு பெயர்ச்சி 2024: கல்யாண யோகம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள்...!

குரு பெயர்ச்சி 2024: கல்யாண யோகம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள்…!

ரிஷபம்

மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கும். முக்கிய முடிவுகள் நல்ல பலன் தரும். அதிர்ஷ்டம் மூலம் முன்னேற்றம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை விரும்பி மேற்கொள்வீர்கள். நீங்கள் உங்கள் துணையுடன் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். நீங்கள் பங்கு வர்த்தகங்களில் பங்கு பெறுவதன் மூலம் பண வரவும் லாபமும் காணலாம். உங்களிடம் காணப்படும் உறுதி மற்றும் தைரியமான மனநிலை காரணமாக உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக யாருக்கும்.

மிதுனம்

சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களிடம் அதிர்ஷ்டம் காணப்படும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். பணியிடத்தில் முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை மேற்கொள்வீர்கள். பண வரவு அதிகமாக காணப்படும். உங்கள் சேமிப்பு கணிசமாக உயரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

கடகம்

நீங்கள் நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகும். தடைகளை சமாளித்து நன்மை காண நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் துணையுடன் வாக்குவாதம் செய்வீர்கள். அமைதியைப் பராமரிக்க இத்தகைய நடவடிக்கையை தவிர்க்க வேண்டும். பயணத்தின் போது பண இழப்பிற்கான சாத்தியம் உள்ளது. எனவே கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வாமை காரணமாக இருமல் ஏற்பட வாய்ப்புள்ளது.

நிதி நெருக்கடியை சந்திக்கப்போகும் ஐந்து ராசிக்காரர்கள்! இன்றைய ராசிபலன்

நிதி நெருக்கடியை சந்திக்கப்போகும் ஐந்து ராசிக்காரர்கள்! இன்றைய ராசிபலன்

சிம்மம்

வெறுமை உணர்வு காணப்படும். வேதனை தரும் சூழ்நிலை காணப்படும். நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு சமநிலை இழப்பீர்கள். திரைப்படம் பார்த்தல் அல்லது இசை கேட்டல் போன்ற நிகழ்சிகளின் மூலம் ஆறுதல் கிடைக்கும். பணியிடத்தில் திருப்திகரமான நிலை காணப்படாது. அதிக வேலைகள் உங்களுக்கு வருத்தம் அளிக்கும். உங்கள் துணையுடன் தகவல் தொடர்பில் பிரச்சினை காணப்படும். இது நல்ல புரிந்துணர்விற்கு தடையாக இருக்கும். உங்கள் துணையுடன் நல்லிணக்கம் பராமரிக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. இருக்கும் பணத்தை விவேகமான முறையில் செலவழிக்க வேண்டும். 

கன்னி

உங்களுக்கு செழிப்பான நாள். நீங்கள் கடினமான பணிகளைக் கூட எளிதாக மேற்கொள்வீர்கள். அனுசரனையான அணுகுமுறை மூலம் நன்மை பெறலாம். பணியிடத்தில் வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். உங்கள் செயல்திறனில் உங்கள் படைப்பாற்றல் வெளிப்படும். துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து மகிழ்வீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். நிதிநிலை அதிர்ஷ்டகரமாக இருக்கும். பங்குகளில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் லாபம் காணலாம். மனதில் காணப்படும் நம்பிக்கை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்

முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் உங்கள் இலக்குகளை அடைய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் முயற்சிக்கு ஊக்கத் தொகை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களுக்கு கணிசமான தொகை கிடைக்கும். அதனை நீங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்துவீர்கள்.  

கனவுகள் நனவாகப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்! இன்றைய ராசிபலன்கள்

கனவுகள் நனவாகப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்! இன்றைய ராசிபலன்கள்

விருச்சிகம்

உங்கள் செயல்களை மேற்கொள்வதில் தாமதங்கள் காணப்படும். உங்கள் அணுகுமுறையில் பொறுமை தேவை. திறம்பட திட்டமிட வேண்டும். இறைவழிபாடு ஆறுதலை பெற்றுத் தரும். பணிகள் கடினமாக காணப்படும். சக பணியாளர்களுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும். உங்கள் துணையின் அன்பும் பாராட்டும் பெற நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உறவை பாதிக்கும் என்பதால் உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் கூடுதல் செலவுகள் செய்ய நேரும். சேமிப்பதற்கான வாய்ப்பும் குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

தனுசு

உங்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வளர்ச்சிப் பாதையில் தடைகளை சமாளிக்க நேரலாம். நீங்கள் இந்தச் சவால்களை உறுதியுடனும் திடமான மனநிலையுடனும் சமாளிக்க வேண்டும். அறிவார்ந்த முறையில் சிந்தித்து செயல்பட வேண்டும். பணியின் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதிக பணிகள் காரணமாக தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் பேசும் போது அமைதியை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் கூடுதல் செலவுகள் செய்ய நேரும். வீட்டுப் புனரமைப்பு மற்றும் நிர்மாணம் குறித்த அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக செலவுகள் அதிகமாக இருக்கும். தியானம் அல்லது யோகா மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.

மகரம்

உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் முயற்சியில் எளிதாக வெற்றி காணும் நாள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் முக்கிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பான வாய்ப்புகள் காணப்படுகின்றன. மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். உங்கள் திறமை மிகவும் பாராட்டப்படும். உங்கள் செயல்திறனில் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். நீங்கள் உங்கள் துணையிடம் அன்பான உணர்வை வெளிப்படுத்துவீர்கள். இருவரும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பண வரவிற்கான சாத்தியம் உள்ளது. உங்கள் சேமிப்பும் கணிசமாக உயரும். உங்களிடத்தில் சிறந்த ஆற்றலும் உற்சாகமும் காணப்படும்.

மே மாதத்தில் உருவாகும் இரட்டை ராஜயோகம்... அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

மே மாதத்தில் உருவாகும் இரட்டை ராஜயோகம்… அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

கும்பம்

உங்கள் வளர்ச்சிப் பாதையில் தடைகள் காணப்படும். என்றாலும் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்பான அணுகுமுறை மூலம் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறலாம். வேலை தொடர்பான பயணம் காணப்படுகின்றது. விரும்பத்தகாத சூழ்நிலை ஏற்படும் என்பதால் பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். அமைதியாகவும் சுமூகமாகவும் இருப்பதன் மூலம் உறவில் நல்லிணக்கத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். உங்கள் மன நிலையில் மாற்றம் வேண்டும். பண வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும். நீங்கள் உங்கள் சம்பாத்தியத்தை அனுபவிக்கும் நிலையில் இருக்க மாட்டீர்கள். 

மீனம்

திருட்டு ஏற்பட வாய்ப்புள்ளதால் கடினமான சூழ்நிலை காணப்படும். இழப்பு ஏற்படாமல் இருக்க உங்கள் மதிப்பு மிக்க பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பணியிடத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். எனவே உங்கள் பணிகளை கவனமுடன் ஆற்ற வேண்டும். பணி சம்பந்தமான பயணம் காணப்படுகின்றது. பண வரவு மகிழ்சிகரமாக இருக்காது. நிதிநிலைமையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். நிதி விஷயத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டப்போகும் ராசியினர் நீங்களா...! இன்றைய ராசிபலன்

மகிழ்ச்சியின் உச்சத்தை எட்டப்போகும் ராசியினர் நீங்களா…! இன்றைய ராசிபலன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.