நிகழ்நிலை காப்புச் சட்டத்தை ரத்துச் செய்வதற்கான தனிநபர் பிரேரணையொன்றை முன்வைக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பான உத்தேச முன்மொழிவு ஒன்றை அவர் கடந்த பெப்ரவரி 28ம் திகதி நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார்.
நிகழ்நிலை காப்புச் சட்டம்
நிகழ்நிலை காப்புச் சட்டத்தை ரத்துச்செய்வதாக இந்த அரசாங்கம் பதவிக்கு வர முன்னர் வாக்களித்திருந்த போதும், இதுவரை அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில், தான் முன்வந்து அதனை முன்மொழியத் தீர்மானித்துள்ளதாக ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) குறிப்பிட்டுள்ளார்.
அதன் மூலம் சமூக வலைத்தளங்களில் சுதந்திரமாக கருத்து வௌியிடும் சந்தர்ப்பத்தை மீண்டும் ஏற்படுத்துவது தனது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
you may like this