ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைவதைத் தடுப்பதற்கான மறைமுக செயற்பாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒரே அணியாக இணைந்து செயற்படுதல், எதிர்வரும் தேர்தல்களில் ஒரே கூட்டணியில் போட்டியிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பாக அண்மைக்காலமாக தொடர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளன.
பல்வேறு முயற்சிகள்
குறித்த பேச்சுவார்த்தைகளில் பெரும்பாலான விடயங்களில் இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அவ்வாறானதொரு இணைவு ஏற்படக்கூடாது என்பதில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக அவர் ஊடக பிரசாரங்கள், இணைப்புக்கு அதிருப்தி தெரிவிக்கும் அரசியல்வாதிகளின் கூட்டணி என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு,
13 February, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
<!–
இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,
–>