ரவி மோகன் பிறந்தநாள்
நடிகர் ரவி மோகனின் பிறந்தநாளான இன்று ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ரவி மோகனை தற்போது இயக்கி வரும் சுதா கொங்கரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதில் ”படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியான இடத்தை தேடினால், அங்கே ரவி இருப்பார், தயாராகி, பதற்றமின்றி, கதாபாத்திரத்திலும், காட்சியிலும் 200% கொடுப்பார்!. உங்களுடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் அழகான ஜெண்டில்மேன் நடிகரே. பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு இனிய நேரங்கள் அமைய வாழ்த்துகள் ரவி மோகன்” என பதிவு செய்துள்ளார்கள்.
View this post on Instagram

5 நாட்களில் மதராஸி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
ரவி மோகன் சம்பளம்
ரவி மோகன் சமீபத்தில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். இதற்காக பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தினார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ப்ரோ கோட், An Ordinary Man ஆகிய திரைப்படங்கள் உருவாகின்றன. இதில் An Ordinary Man எனும் படத்தை ரவி மோகன் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ப்ரோ கோட் படத்தை தயாரித்து நடிக்கும் ரவி மோகன் இப்படத்திற்காக ரூ. 25 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் நடிக்கும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ரூ. 10 கோடி சம்பளம் என்றும் படத்தை ரூ. 70 கோடி பட்ஜெட்டில் எடுப்பதாகவும் பிரபல மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

