நடிகர் ரவிமோகன் தனது பெயருக்கு முன்னால் இருந்த ஜெயம் என்பதை நீக்குவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். தற்போது சில படங்கள் கைவசம் வைத்து இருக்கும் அவர் அடுத்து இயக்குனராக களமிறங்க போகிறாராம்.
அதற்கான பணிகளையும் அவர் தற்போது தொடங்கிவிட்டார்.
யோகி பாபு
நடிகர் யோகி பாபுவை ஹீரோவாக வைத்து தான் ரவி மேகன் படம் இயக்க போகிறார். இந்த தகவலை யோகி பாபுவே தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
யோகி பாபு தற்போது மற்ற படங்களின் ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் அதை எல்லாம் முடித்துவிட்டு இன்னும் சில மாதங்களில் ஷூட்டிங்கை தொடங்க போகிறாராம்.