ரவி மோகன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரவி மோகன். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கிய இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நித்யா மேனன் நடித்திருந்தார்.
தற்போது, இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ரகசியம்
இந்நிலையில், இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் கராத்தே பாபு படம் குறித்து சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், ” கராத்தே பாபு படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிட்டதட்ட இறுதிகட்ட படப்பிடிப்பு நெருங்கிவிட்டது. இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே உள்ளது.


கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா.. இயக்குநர் யார் தெரியுமா? மாஸ் கூட்டணி
இந்த படத்தில் இருப்பது போன்று என்னை நானே இதுவரை பார்த்தது கிடையாது. புதிதாக ஒரு விஷயத்தை முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் இருந்தது. அது ‘கராத்தே பாபு’ படத்தில் நடக்கிறது. அப்படம் என் கரியரில் ஒரு முக்கியமான படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

