முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எந்த நேரத்திலும் வெளியேற தயார் : மகிந்த அறிவிப்பு

கொழும்பு விஜேராம மாவத்தையில் தனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை எந்த நேரத்திலும் விட்டு வெளியேற தயாராக இருப்பதாகவும், ஒரு கணம் கூட அங்கு தங்குத் தயாராக இல்லை என்றும் மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(anura kumara dissanayake), உத்தியோகபூர்வ இல்லத்தில் மகிந்த ராஜபக்ச தொடர்ந்து வசித்தால், மாத வாடகையாக 4.6 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும், இல்லையெனில் அவர் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக கூறியது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்று கேட்டவேளை பதிலளிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தக் கருத்தை வெளியிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எழுத்துபூர்வமாக அறிவிக்கப்படவில்லை

உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யுமாறு எழுத்துபூர்வமாக இன்னும் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்றும், அது கிடைத்தவுடன் காலி செய்வதாகவும் அவர் கூறினார்.

எந்த நேரத்திலும் வெளியேற தயார் : மகிந்த அறிவிப்பு | Ready To Leave The Official Residence Mahinda

முன்னாள் ஜனாதிபதியாக அரசாங்கத்திடமிருந்து பெற்ற அனைத்தையும் திரும்பப் பெற்றாலும், மகிந்த ராஜபக்ச ஒரு புலம்பல் செய்பவர் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது 

முன்னாள் அரச தலைவருக்கு பொருத்தமான வீடு வாடகை இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு தெளிவாகக் கூறுகிறது என்றும், அதன்படி, தான் இந்த அதிகாரபூர்வ இல்லத்தில் வசிக்கிறார் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

எந்த நேரத்திலும் வெளியேற தயார் : மகிந்த அறிவிப்பு | Ready To Leave The Official Residence Mahinda

இது தொடர்பாக ஜனாதிபதி எந்த முடிவையும் எடுக்க முடியும் என்றாலும், இதன்மூலம் தனது அரசியல் பயணத்தை நிறுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பான ஜனாதிபதி அநுரவின் பகிரங்க அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(prasanna rantunga), நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் அவரைச் சந்திக்க விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்றனர்.

விடுதலைப் புலிகள் முப்பது ஆண்டுகள் போரை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டிற்கு சுதந்திரம் கொண்டு வந்த ஒரு அரசியல்வாதியை அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுமாறு தெரிவித்ததை கண்டித்து அங்கு கூடியிருந்தவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.