அநுர அரசு நியாயமான ஊழலுக்கு எதிரான அரசு போதைவஸ்துக்களை கண்டுபிடிக்கின்றது
நல்ல விடயங்களுக்கு நாங்களும் கை கொடுக்க தயாராக இருக்கின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பாரதிபுரம் சூசை பிள்ளை கடைச் சந்தியில் நடைபெற்ற போரின் போது
உயிரிழந்த முதற்பண் மாவீரர் மாலதியினுடைய 38வது ஆண்டு நினைவு வழக்க நிகழ்வில்
கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை
தொடர்ந்து உரையாற்றும் போது, சர்வதேச அரங்கிலே பேசப்படுகின்ற ஒரு இனமாக
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

அநுர அரசு ஒரு நியாயமான ஊழலுக்கு
எதிரான அரசு என்பதோடு போதைவஸ்துக்களை கண்டுபிடிக்கின்றது.
நல்ல விடயங்களுக்கு
நாங்களும் கைகொடுக்க தயாராக இருக்கின்றோம்.
ஆனாலும் தைரியமுள்ள அரசாக இருந்தால் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு
சர்வதேச விசாரணை மேற்கொண்டு நிரூபிக்கட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

