முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசியலில் இருந்து ஒதுங்கவும் தயார் : கஜேந்திரகுமார் பகிரங்கம்

ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதன் பின் தேசியம் பேசி
பயனில்லை. நானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் என தமிழ் தேசிய மக்கள்
முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் வடக்கு மாகாண ஊடகவியலாளர்ளுக்கு தெளிவூட்டும்
கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று
(28) இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே
அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கட்சிகளின் ஆதரவுடன்…

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கமானது அறுதிப் பெருமபான்மையுடன் உள்ளது. இந்த அரசாங்கம் மக்கள
மத்தியில் தனது இருப்பை தக்க வைக்க ஏதாவது செய்ய வேண்டியுள்ளது.

அரசியலில் இருந்து ஒதுங்கவும் தயார் : கஜேந்திரகுமார் பகிரங்கம் | Ready To Retire From Politics Gajendra Kumar

அதனடிப்படையில் விரைவாக ஒரு அரசியலமைப்பை கொண்டு வர வாய்ப்புள்ளது.

அறுதிப்
பெரும்பான்மையுடன் இருப்பதால் இந்த அரசாங்கம் கொண்டு வரும் அரசியலமைப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும்.

வடக்கு – கிழக்கு ரீதியில் 19 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
அதில் தேசியம் என்ற அடிப்படையில் 10 பேர் இருக்கின்றோம்.

குறைந்தபட்சம் இந்த
அரசாங்கம் கொண்டு வரும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை தேசியம் பேசுகின்ற 10
பேராவது எதிர்க்காவிட்டால் தமிழ் தேசிய கட்சிகளின் ஆதரவுடன் இரு
நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும். அதன் பின் நாம் தேசியம் பேசி பயனில்லை. 

சுய நிர்ணய உரிமையுடன கூடிய ஒரு அரசியலமைப்பு

குறிப்பாக இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து 3 அரசியலமைப்பு சீர்திருத்தங்களை
எமது தமிழ் தலைமைகள் எதிர்த்து வந்துள்ளனர்.

அதன் காரணமாகவே தமிழ் தேசிய இனப்
பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்ற நிலை சர்வதேச சமூகம் மத்தியில்
உள்ளது.

அரசியலில் இருந்து ஒதுங்கவும் தயார் : கஜேந்திரகுமார் பகிரங்கம் | Ready To Retire From Politics Gajendra Kumar

புதிய அரசியலமைப்பை தமிழ் தேசிய் கட்சிகள் ஏற்றுக் கொண்டால் 76
வருடமாக தமிழ் தலைமைகளும், விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களன் அபிலாசைகளுக்காக
செய்த அத்தனை தியாகங்களும் வீணாகிவிடும். 

எனவே, தமிழ் தேசிய கட்சிகள ஒன்று சேர்ந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை எதிர்த்து
வடக்கு – கிழக்கு தமிழர் தேசம் என அங்கீகரிக்கப்பட்ட, தமிழ் மக்களின் சுய
நிர்ணய உரிமையுடன கூடிய ஒரு அரசியலமைப்பை கோர வேண்டும்.

நாடு பிரிக்கப்படாது
அது வழங்கபடுமாக இருந்தால் சமஸ்டி ஊடாக மட்டுமே அதனை வழங்க முடியும். எனவே
அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இந்த விடயத்தில் ஒன்றுபட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.