நடிகர் அஜித்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலமாக இருப்பவர் அஜித்.
சினிமா தான் வாழ்க்கை என இல்லாமல் அதுவும் இருக்கட்டும், எனது கனவுகளை நோக்கியும் நான் பயணம் செய்வேன், வெற்றி காண்பேன் என சந்தோஷமாக செய்து வருகிறார்.
இந்த வருட ஆரம்பத்தில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக வரும் ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகவுள்ளது.
திடீர் விசிட்
வெளிநாட்டில் கார் ரேஸில் அதிக கவனம் செலுத்திவந்த அஜித் திடீரென சென்னை வந்தார். அவர் திடீரென சென்னை வந்ததன் காரணமே தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க தானாம்.
சென்னை வந்த அன்றே மீண்டும் அவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டாராம். அவரது மகனுடன் அஜித் இருந்த வீடியோ எப்போதோ எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.