முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வட மாகாணத்தில் அநுர அரசின் தோல்விக்கான காரணம்

வட மாகாண மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமையினாலேயே, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் வடக்கில் கடும் தோல்வி அடைந்துள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சீவி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

பொய்யான வாக்குறுதிகளே வடக்கு மற்றும் கிழக்கில் அரசினால் வெற்றியை பெற முடியாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த முறை வடக்கில் தமிழ் கட்சிகளுக்குள் பிரச்சினை இருந்தமையினால் அரசாங்கத்திற்கு இலகுவாக நுழைய கூடிய வகையிலான சூழல் காணப்பட்டது.

தமிழ் கட்சிகளுக்குள் மாற்றங்கள்

எனினும் இம்முறை தமிழ் கட்சிகளுக்குள் மாற்றங்கள் இருந்தாலும் அரசாங்கத்திற்கு வாக்களிக்க கூடானதென தமிழ் மக்கள் நினைத்துள்ளனர். அரசியல் கட்சிகளும் மக்களிடம் கேட்டுக்கொண்டது.

வட மாகாணத்தில் அநுர அரசின் தோல்விக்கான காரணம் | Reason For Anura S Defeat In North

அரசாங்கம் முன்பு வழங்கிய வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றவில்லை. சிறையில் இருப்பவர்கள் விடுவிப்பதாக கூறிய போதிலும் இதுவரையில் விடுவிக்கவில்லை.

காணிகள் கையகப்படுத்தப்படாதென கூறப்பட்டது. எனினும் திணைக்களால் மக்களின் காணிகள் தொடர்ந்து கையகப்படுத்தப்பட்டு வருகின்றது.

இராணுவம் குறைப்படும் என கூறிட்டு அங்கும் இங்கும் சிலரை மாத்திரம் குறைத்து விட்டு அதிகளவில் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் 2 பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்ற கணக்கில் உள்ளனர். அவ்வாறான நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் கொள்ளைகளும் முன்பு இருந்த அரசாங்கத்தின் கொள்ளைகளிலும் மாற்றம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

சிங்கள பெரும்பான்மை

இதன் காரணமாகவே இம்முறை அரசாங்கத்திற்கு இந்த மக்களின் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கவில்லை.

வடக்கு கிழக்கு மக்கள், சிங்கள மக்களுடன் நல்ல உறவில் தான் உள்ளனர். எனினும் எங்களுக்கு என்று உரிமை உள்ளது.

வட மாகாணத்தில் அநுர அரசின் தோல்விக்கான காரணம் | Reason For Anura S Defeat In North

இதனால் தமிழ் மக்கள் என்ற ரீதியின் தமிழர்களின் இடத்தை நிர்வகிக்க எங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்பதனையே நாங்கள் கோருகின்றோம்.

தான் முதலமைச்சராக இருந்த காலத்தில் வட மாகாணத்திற்கு அரசாங்கத்தினால் மிகச் சிறிய தொகை ஒன்றே வழங்கப்பட்டது.

12 ஆயிரம் மில்லியன் ரூபாய் கேட்டோம். ஆனால் 1600 மில்லியன் ரூபாயே வழங்கப்பட்டது.

சிங்கள பெரும்பான்மை கொண்ட அரசாங்கத்தினால் எங்களுக்கு எவ்வித உரிமையும் வழங்கப்படாமல் உள்ளது.

இதனாலேயே எங்கள் மக்கள் இதனை சுட்டிக்காட்டி தமிழ் கட்சிகளுக்கு வாக்களித்துள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.