கம்பஹா மாவட்டத்தில் வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளை எண்ணுவதில் ஏற்பட்ட குழப்பத்தினாலேயே அந்த மாவட்டத்தின் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரி லலிந்த கமகே தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி மற்றும் சமகி ஜன பலவேகய ஆகிய கட்சி வேட்பாளர்களின் விருப்பு வாக்கு எண்ணும் பணி மேற்கொள்ளப்பட்ட மண்டபத்தில் வாக்குகளை எண்ணுவதில் அதிகாரிகள் சிறிது தடுமாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு லலிந்த கமகேவால் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாக்கெண்ணுவதில் சிரமம்
இந்நிலையில், விருப்பு வாக்கு எண்ணிக்கைகளை ஒப்பிட்டு எண்ணுவதில் மீண்டும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் மாவட்டங்களில் அதிகளவிலான வாக்காளர்களைக் கொண்ட கம்பஹா மாவட்டத்தில் மொத்தம் 224 வாக்குகளை எண்ணும் மத்திய நிலையங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.