கொழும்பு துறைமுகத்தின் தனியார் முனைய செயற்பாட்டாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் மூலோபாய அபிவிருத்திச் சட்டம் மற்றும் முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் பல்வேறு வரிச் சலுகைகளைப் பெறுவார்கள் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கிழக்கு கொள்கலன் முனைய திட்டத்தை “சிறப்பு திட்டமாக” பெயரிட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தீர்மானம்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை துறைமுக அதிகாரசபை 02-01-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொழும்பு தெற்கு துறைமுகத் திட்டத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கும், அதனை அதிகாரத்தின் முழு உரிமையின் கீழ் கொள்கலன் முனையமாக செயற்படுத்துவதற்கும் அனுமதி வழங்கியிருந்தது.
இதன்படி, குறித்த சிவில் வேலைகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதுடன், நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வரிச் சலுகை
மேலும், குறித்த கொள்கலன் முனையத்திற்கான கிரேன்கள் கொள்வனவு செய்வதற்கான கொள்முதலும் வழங்கப்பட்டுள்ளது.
இதன் போதே, கொழும்பு துறைமுகத்தின் தனியார் முனைய செயற்பாட்டாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் மூலோபாய அபிவிருத்திச் சட்டம் மற்றும் முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் பல்வேறு வரிச் சலுகைகளைப் பெறுவார்கள் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.