தாதிய பயிற்சிக் கல்லூரிகளில் தாதியவிரிவுரையாளர்கள் பற்றாக்குறை இருப்பதால், அவசரமாக ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தாதிய பயிற்சிகல்லூரிகளில் அங்கீகரிக்கப்பட்ட தாதிய விரிவுரையாளர்களின் எண்ணிக்கை 395 என்றும், தற்போது 220 பேர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாதிய விரிவுரையாளர்கள்
அதன்படி, மேலும் 175 தாதிய விரிவுரையாளர்கள் தேவை என்று கூறப்படுகிறது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் தாதிய பயிற்சிக் கல்லூரி முதல்வர்கள் சங்க உறுப்பினர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயங்கள் தெரியவந்தன.
அமைச்சரின் உத்தரவு
அதன்படி, தாதிய விரிவுரையாளர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்யுமாறும், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களுக்கு நேரமுகத்தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்புகளை நடத்துமாறும் சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


