வெளிநாடுகளில் கல்வியை பெறுவதற்காக ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெற்ற அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு சிவப்பு அறிவிப்புகளை வெளியிடுவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு குறித்த சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது, வெளிநாட்டில் கல்வி கற்பதற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து உதவி பெற்ற அரசியல்வாதிகளின் உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிட்டது.
சட்ட ஆலோசனை
இந்த முறையில் ஜனாதிபதி நிதியத்தால் செய்யப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவ்வாறு செலவிடப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் ஏற்கனவே சட்ட ஆலோசனையைப் பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
இந்த நிலையில் ஜனாதிபதி நிதியிலிருந்து வெளிநாட்டு உதவித்தொகை பெறுவது தொடர்புடைய சட்டத்தின் விதிகளின்படி சட்டவிரோதமானது, என்று சட்டத் துறை சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.