முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஏமனில் விபத்துக்குள்ளான அகதிகள் படகு: 49 பேர் பரிதாபகரமாக பலி!

சோமாலியா (Somalia) மற்றும் எத்தியோப்பியாவைச் (Ethiopia) சேர்ந்த அகதிகளுடன் பயணித்த படகொன்று ஏமன் (Yemen) அருகே கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியதில் இதுவரை சுமார் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், இந்த படகில் பயணித்த மேலும் 140 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

விபத்துக்குள்ளான படகு

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சோமாலியாவின் வடக்கு கடற்கரையிலிருந்து சுமார் 260 சோமாலியர்கள் மற்றும் எத்தியோப்பியர்களை ஏற்றிக்கொண்டு ஏமன் வளைகுடா வழியாக படகு ஒன்று பயணித்தது.

ஏமனில் விபத்துக்குள்ளான அகதிகள் படகு: 49 பேர் பரிதாபகரமாக பலி! | Refugees Migrants Dead Boat Sinking Off Yemen

கனடாவில் கோர விபத்து : சம்பவ இடத்தில் பலியான ஈழத்தமிழன்

கனடாவில் கோர விபத்து : சம்பவ இடத்தில் பலியான ஈழத்தமிழன்

320 கிலோமீட்டர் பயணித்த நிலையில் அந்த படகு, ஏமனின் தெற்கு கடற்கரையில் நேற்று (10) மூழ்கியது.

இதில், சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த படகில் பயணித்த 140 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

படகில் பயணித்தவர்களில் இதுவரை 71 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் 3க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவால்களுக்கு தீர்வு

இந்த நிலையில், புலம்பெயர்வோர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு விரைவாக தீர்வு காண்பதற்கான மற்றுமொரு நினைவூட்டலாக இந்தச் விபத்து அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முகமதலி அபுனஜெலா (Mohammedali Abunajela) தெரிவித்துள்ளார். 

ஏமனில் விபத்துக்குள்ளான அகதிகள் படகு: 49 பேர் பரிதாபகரமாக பலி! | Refugees Migrants Dead Boat Sinking Off Yemen  

காணாமல் போன விமானம்: சடலமாக மீட்கப்பட்ட மலாவி துணை அதிபர்

காணாமல் போன விமானம்: சடலமாக மீட்கப்பட்ட மலாவி துணை அதிபர்

மேலும் தெரிவித்த அவர், “அவசரமாக புலம்பெயர்வோர் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பதோடு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளது.

பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஏமனில் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் இருந்த போதிலும், 2021 முதல் 2023 வரை ஆண்டுதோறும் அந்த நாட்டுக்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 27,000த்திலிருந்து 90,000 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 3,80,000 புலம்பெயர்ந்தோர் தற்போது ஏமனில் உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

இந்திரா காந்தி படுகொலையை ஆதரிக்கும் சிலைகள்: இந்திய-கனடா உறவில் விரிசல்

இந்திரா காந்தி படுகொலையை ஆதரிக்கும் சிலைகள்: இந்திய-கனடா உறவில் விரிசல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.