ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம தொகுதி அமைப்பாளரும், வெலிகம முன்னாள் நகர மேயருமான ரெஹான் ஜயவிக்ரம (Rehan Jayawickreme) ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு (Sajith Premadasa) அனுப்பி வைத்துள்ள பதவி விலகல் கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், கட்சியின் தற்போதைய கொள்கைகள் குறித்து தான் திருப்தியடையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுயநல அரசியல் நடவடிக்கை
பதவி விலகுவது ஒரு சுயநல அரசியல் நடவடிக்கையல்ல என்றும் ஜயவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் தாய்நாட்டிற்கு முன்னாலுள்ள குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால சவால்களை வெற்றிகொள்வதற்காக, தனிப்பட்ட நலன்களைப் புறந்தள்ளி எடுக்கப்பட்ட ஒரு தீர்மானம் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/YiON-ykQP-U

