நடிகர் அபிநய்
தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அபிநய்.
அப்படத்தை தொடர்ந்து ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி விஜய்யின் துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனுக்கு இவர்தான் குரல் கொடுத்திருந்தார்.

பின் சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லாமல் போக வருமானத்திற்கு கஷ்டப்பட்டுள்ளார்.
சமீபத்தில் அபிநய் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வர KPY பாலா, நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்தனர்.
அந்த பணத்தை வைத்து சிகிச்சை செலவை பார்த்து வந்த அபிநய் நேற்று (நவம்பர் 10) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

உறவினர்கள்
அபிநய் இறந்த செய்தியை கேள்விப்பட்ட பாலா அவரது உடல் தகனம் செய்யும் வரை எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொண்டார்.
அபிநய் இறந்த உடனே அவரின் உறவினர்களுக்கு போன் செய்துள்ளனர். ஆனால் எல்லோருமே எங்க நம்மள எல்லாத்தையும் செய்ய வச்சிடுவாங்களோனு தவிர்த்துவிட்டார்களாம்.

அதெல்லாம் என்ன மாதிரி மன நிலைனு எனக்கு தெரியல, கடைசியில் நண்பர்கள் தான் அவருக்கு எல்லாவற்றையும் செய்தார்கள் என நடிகர் விஜய் முத்து கூறியுள்ளார்.

