எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை திடீரென சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கலந்துரையாடவே நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க சபாநாயகரைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
பல்வேறு கருத்துக்கள்
குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஆளுங்கட்சி பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றது.

அத்துடன் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைத்துள்ள வழிமுறை தவறு என்பதால் அதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கட்சித் தலைவர்கள் கூட்டம்
எனினும் அருண ஜயசேகரவுக்கு எதிராக முன்வைக்க்பபட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், நாளை (21) நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அது குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யுமாறும் கயந்த கருணாதிலக்க இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியது சபாநாயகர் தான் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

