ரீ ரிலீஸ்
சமீபகாலமாக ரீ ரிலீஸ் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெரிதாகி கொண்டே இருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் விஜய்யின் கில்லி திரைப்படம் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனையை படைத்தது.
இதுவரை உலகளவில் ரூ. 24 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள கில்லி படம் இந்திய சினிமாவில் புதிய மையில்கல்லை தொட்டது. விஜய்யின் கில்லி படத்தின் ரீ ரிலீஸை தொடர்ந்து தற்போது அஜித்தின் படங்களும் ரீ ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
தெலுங்கு திரையுலகை பழிவாங்க நினைந்த இயக்குனர் சுந்தர் சி.. காப்பியடித்து எடுத்த திரைப்படம்
வசூல்
ஆம், நாளை நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால், அவர் நடித்து வெளிவந்த இரண்டு சூப்பர்ஹிட் திரைப்படங்கள் தீனா மற்றும் பில்லா ஆகிய படங்களை ரீ ரிலீஸ் செய்கிறார்கள்.
இந்த இரண்டு திரைப்படங்களின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை தீனா மற்றும் பில்லா ஆகிய இரு திரைப்படங்களும் ரூ. 40 லட்சம் வரை ப்ரீ புக்கிங்கில் வசூல் செய்துள்ளதாம்.