முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரிவால்வர் ரீட்டா திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் நிறைய வர தொடங்கியுள்ளது, அந்த வகையில் தற்போது சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா நடிப்பில் இன்று வெளிவந்துள்ள ரிவால்வர் ரீட்டா படம் எப்படி பார்ப்போம்.

ரிவால்வர் ரீட்டா திரை விமர்சனம் | Revolver Rita Movie Review

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்தில் பாண்டிசேரியில் 2 சம்பவம் நடக்கிறது. கீர்த்தி சுரேஷ் அப்பா 30 வருட உழைப்பில் 2 கோடிக்கு ஒரு லாண்ட் வாங்குகிறார். ஆனால், அது போலி கிரவுண்ட் ஏமாற்றி விற்றுவிட்டார்கள் என தெரிந்து தன்னை தானே சுட்டு இறக்கிறார்.

அதே நேரத்தில் பாண்டிசேரி டான் ட்ராகுலா பாண்டியன், ட்ராகுலா பேபி ஊரையே மிரட்டி ரவுடிசம் செய்ய, அந்த நேரத்தில் அவர்களை எதிர்த்த நரசிம்மா ரெட்டியை கொல்கின்றனர். இதனால், நரசிம்மா ரெட்டி தம்பி ட்ராகுலா பாண்டியனை கொல்ல ஸ்கெட்ச் போடுகிறார்.

ரிவால்வர் ரீட்டா திரை விமர்சனம் | Revolver Rita Movie Review

அந்த வேலை கல்யாண் மாஸ்டருக்கு வருகிறது, அவரை ஒரு வீட்டிற்கு வரவைத்து கொல்ல திட்டம் போட, ட்ராகுலா பாண்டியன் தவறுதலாக கீர்த்தி வீட்டிற்கு செல்கிறார், இங்கு நடந்த குளறுபடியால் ராதிகா, கீர்த்தி ட்ராகுலா பாண்டியனை தாக்க, அவர் கீழே விழுந்து இறக்கிறார்.

இதன் பிறகு ட்ராகுலா பாண்டியன் உடலை கீர்த்தி குடும்பம் மறைத்து இதிலிருந்து தப்பித்தார்களா என்பதே மீதிக்கதை. 

ரிவால்வர் ரீட்டா திரை விமர்சனம் | Revolver Rita Movie Review

தேரே இஷ்க் மே: திரைவிமர்சனம்

தேரே இஷ்க் மே: திரைவிமர்சனம்

படத்தை பற்றிய அலசல்

கீர்த்தி சுரேஷ் சோலோ ஹீரோயினாக களம் இறங்கியுள்ள படம். அவரும் மாஸ் ஹீரோ போல் இறங்கு மாஸ் காட்டியுள்ளார், எத்தனை பிரச்சனைகளையும் கேஷ்வல் ஆக டீல் செய்து உடனே உடனே முடிவு எடுப்பது என கீர்த்தி தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

கீர்த்தி தாண்டி ராதிகா தன் கதபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார், எவ்ளோ பிரச்சனைகள் வந்தாலும் அவரின் இன்னசெண்ட் விஷயங்கள் ரசிக்க வைக்கிறது. இதை தாண்டி செண்ட்ராயன் வைத்து அவரால் கெட்ட வார்த்தை பேசாமல் இருக்க முடியாது, அவர் போலிஸிடம் மாட்டி அங்கு செய்யும் விஷயங்கள் செம கலாட்டா.

ரிவால்வர் ரீட்டா திரை விமர்சனம் | Revolver Rita Movie Review

அதே போல் ரெட்டி ட்ராகுலா பாண்டி தலையை கேட்பது வைத்து ஒரு காமெடி அது க்ளிக் ஆகியுள்ளது

ஆனால், எண்ணி பார்த்தால் இப்படி ஒரு சில காட்சிகளே சிரிப்பு வர வைக்கிறது.

படத்தின் பல காட்சிகள் அவர்கள் மட்டுமே பேசுகின்றனர் நமக்கு சிரிப்பு வரவில்லை.

இந்த மாதிரி படங்கள் என்றாலே சில டெம்ப்ளேட் இருக்கும், 2 குரூப் அதில் மாட்டிக்கொள்ளும் ஹீரோயின் கதாபாத்திரம், அந்த 2 குரூப்-யும் ஒன்றாக கோர்த்துவிட்டு ஹீரோயின் சேப் ஆக எஸ்கேப் ஆவது.

ரிவால்வர் ரீட்டா திரை விமர்சனம் | Revolver Rita Movie Review

அச்சு பிசிறாமல் இந்த படத்தையும் எடுத்துள்ளனர், ஆனால், என்ன சுவாரஸ்யமும் காமெடியும் தான் மிஸ்ஸிங்.

டெக்னிக்கலாக படம் வலுவாகவே உள்ளது, ஒளிப்பதிவு, இசை என இரண்டுமே நன்றாக உள்ளது 

க்ளாப்ஸ்

கீர்த்தி, ராதிகா நடிப்பு

டெக்னிக்கல் ஒர்க்

பல்ப்ஸ்

பெரிய சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை.

மொத்தத்தில் இந்த ரிவால்வர் ரீட்டா டார்க் காமெடி தான், அதற்காக காமெடியே தெரியாத அளவிற்கு டார்க் ஆக இருப்பதா.. 

ரிவால்வர் ரீட்டா திரை விமர்சனம் | Revolver Rita Movie Review

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.