வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ய உதவுபவா்களுக்கு 5 கோடி டொலா் (சுமாா் ரூ.483 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல்காரா்களில் ஒருவா் மதுரோ என்று ட்ரம்ப் தலைமையிலான அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
மதுரோ நீதியிலிருந்து தப்ப முடியாது
இது குறித்து அமெரிக்க சட்டமா அதிபர் பாம் பொண்டி கூறுகையில், ‘ஜனாதிபதி ட்ரம்பின் தலைமையில், மதுரோ நீதியிலிருந்து தப்ப முடியாது. அவரது குற்றங்களுக்கு பொறுப்பேற்க வைக்கப்படுவாா்’ என்றாா்.
மதுரோ மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாத குற்றச்சாட்டுகள் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கடந்த 2020-ல் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் அவா் தொடா்புடைய 70 கோடி டொலா் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன