மூக்குத்தி அம்மன்
நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளிவந்திருந்தாலும் மக்களிடையே பேராதரவை பெற்றது.
ஆர்.ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருந்த மட்டுமின்றி, என்.ஜே. சரவணனுடன் இணைந்து படத்தை இயக்கியும் இருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 குறித்த பேசப்பட்டு வந்தது. ஆனால், ஆர்.ஜே. பாலாஜி தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் இதுகுறித்து வெளிவரவில்லை.
சமீபத்தில் மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து அறிவிப்பு வெளிவந்த நிலையில், இப்படத்தை பாலாஜிக்கு பதிலாக சுந்தர் சி இயக்கப்போகிறார் என அறிவித்திருந்தனர். மேலும் கடந்த வாரம் இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
ஆர்.ஜே. பாலாஜி ஓபன் டாக்
மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி ஏன் இயக்கவில்லை என கூறி பல தகவல்கள் இணையத்தில் உலா வந்த நிலையில், இதுகுறித்து அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.
இதில், “மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளிவந்த பிறகு, அதன் இரண்டாம் பாகத்தை எப்படி உருவாக்குவது என தயாரிப்பாளர்கள் யோசித்து கொண்டிருந்தார்கள். ஆனால், எனக்கு இரண்டாம் பாகம் குறித்து எந்த ஒரு யோசனையும் இல்லை. எனது எண்ணங்கள் எல்லாம் வேறு கதைகளில், வேறு படங்களில் இருந்தன. இப்பொது என்னை சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குநர் சுந்தர் சி அப்படத்தை இயக்குகிறார். அது மிகவும் சரியான விஷயம். இதை அவரிடமே நான் கூறியுள்ளேன்” என ஆர்.ஜே. பாலாஜி கூறியுள்ளார்.