தொம்பே உள்ளூராட்சி மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினேஷா மதுஷானி ராமநாயக்க என்ற உறுப்பினர் தனது பதவி விலகலுக்கான காரணங்களை விளக்கி கடிதம் அனுப்பியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வருண ராஜபக்ச கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைப்பாளர் மீது குற்றச்சாட்டு
கட்சியின் அமைப்பாளர் தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எந்த உதவியும் செய்யவில்லை என தினேஷா மதுஷானி குறிப்பிட்டுள்ளார்.

தனது இலக்குகளையும் நலன்களையும் நிறைவேற்ற மட்டுமே அமைப்பாளர் பணியாற்றி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து கட்சிக்கு அறிவிக்கப்பட்ட போது, அவர் ஒரு பழைய உறுப்பினராக இருந்ததால், கட்சியால் இந்த விடயத்தை கையாள முடியாது என அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியதாக வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

