வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய சென்றிருந்ததாக வெளியான செய்திகள் போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஊடகப் பிரிவு, இது போலியான செய்தி என்பதை எமது ஊடகத்திற்கு உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (24) அதிகாலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றதாக தென்னிலங்கையின் பிரதான ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
உறுதிப்படுத்தப்பட்ட தகவல்
அதன்போது, முன்னாள் ஜனாதிபதி ரணிலின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவுடன் பிரதமர் வந்திருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்லாமல், அவர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் செலவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இது குறித்து எமது ஊடகம் பிரதமர் ஹரிணியின் ஊடகப் பிரிவை தொடர்பு கொண்டதையடுத்து அது போலியான செய்தி என உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், குறித்த செய்தியை பிரசுரித்திருந்த ஊடகத்திற்கு எதிராக பிரதமர் அலுவலகம் சட்ட நடவடிக்கைக்கு தயாராகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


