விடாமுயற்சி
வருகிற 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வெளிவரவுள்ளது என படக்குழு அறிவித்த நிலையில், ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை காண ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
நடிகர் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லையா? என்ன ஆனது
ரிலீஸ்
இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பேசியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைய வில்லை என்பதன் காரணமாக, பொங்கலுக்கு படம் ரிலீஸ் இல்லை என அவர் கூறியுள்ளார். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் இல்லை, படம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளிவரும் என சொல்லப்படுகிறது.