2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படுத்தும் வகையில் ரஷ்ய அரசாங்கம் புற்றுநோய் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அத்துடன், ரஷ்யாவின் (Russia) இந்த mRNA தடுப்பூசியானது, நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்றும் அந்நாட்டு கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் அண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகள் தற்போது இறுதி ஆய்வுகளில் உள்ளதாகவும், ரஷ்ய சுகாதார அமைச்சகம் இந்த தடுப்பூசிகளை விரைவில் பொதுவாக பயன்படுத்தக்கூடியதாகும் எனவும் அறிவித்துள்ளது.
இறுதி ஆய்வு
இதேவேளை, புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை உருவாக்கி இறுதி ஆய்வுகளை நடத்தியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக பலனை கொடுக்கும் எனவும் புடின் வலியுறுத்தியுள்ளார்.