ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு எரிவாயு வழங்கும் நார்த் ஸ்ட்ரீம் கடலடி குழாய் வெடிப்பில் தொடர்புடையவர் எனக் கருதப்படும் உக்ரைன் நாட்டவர் ஒருவரை ஜெர்மனிக்கு ஒப்படைக்க இத்தாலிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
49 வயதான அந்த நபர் கடந்த ஓகஸ்ட் மாதம் ரிமினி கடற்கரையில் ஐரோப்பிய கைது உத்தரவின் பேரில் பிடிபட்டார்.
அதன்படி, நாடுகடத்தல் தொடா்பாக நடைபெற்ற வழக்கில் வாதாடிய அவரது சட்டத்தரணி கருத்து தெரிவிக்க உரிமை மறுக்கப்பட்டதாகவும், ஜெர்மனியிலிருந்து தேவையான ஆவணங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
விசாரணையில் தெரியவந்த பின்னணி
மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
2022 செப்டம்பர் மாதம் பால்டிக் கடலடியில் அமைந்திருந்த நார்த் ஸ்ட்ரீம் குழாய்களில் திடீர் கசிவு ஏற்பட்டது.பின்னர் நடைபெற்ற விசாரணைகளில் அது வெடிவைத்ததால் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது.
குறித்த காலப்பகுதியில் ரஷ்யாவிடம் இருந்து எரிவாயு வாங்க வேண்டாம் என்று ஐரோப்பிய நாடுகளை உக்ரைன் ஜனாதிபதி விளோடிமீர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.