முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புடினின் மறைக்கப்பட்ட ஆடம்பர வாழ்க்கை அம்பலம் : இரகசியமாக வளர்க்கப்படும் இரண்டு மகன்கள்

ரஷ்ய(russia) ஜனாதிபதி புடினின்(putin) இரகசிய வாழ்க்கை தொடர்பான விடயத்தை அம்பலத்திற்கு கொண்டு வந்துள்ளது ரஷ்ய புலனாய்வு இதழியல் வலைத்தளம்.

இதன்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இரண்டு மகன்கள் உள்ளதாகவும், அவர்கள் இருவரையும் பல ஆண்டுகளாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைத்து வைத்திருப்பதாகவும், அவர்களின் இருப்பை பாதுகாக்கப்பட்ட அரசு இரகசியமாக கருதுவதாகவும் ரஷ்ய புலனாய்வு இதழியல் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த இதழியலில் கூறியிருப்பதாவது,

தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை

முன்னாள் ஒலிம்பிக் ஜிம்னாஸ்ட் வீராங்கனையான அலினா கபேவாவுக்கும் புடினுக்குமாக பிறந்த இரண்டு இரகசிய மகன்கள் உள்ளனர். இவான் என்ற பெயரில் 9 வயதில் ஒரு மகனும், 5 வயதில் விளாடிமிர் ஜூனியரும் ஆடம்பரமான தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையில் வளர்க்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் பெற்றோரை பின்னிரவு மட்டுமே பார்க்கிறார்கள்.

கபேவா 2015 ஆம் ஆண்டில் ஒரு தனியார் சுவிஸ் மருத்துவமனையில் இவானைப் பெற்றெடுத்தார்; விளாடிமிர் ஜூனியரை 2019 இல் மொஸ்கோவில் பெற்றெடுத்தார். அவர்களின் பிறந்த திகதிகள் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே தெரியும்.

இந்த நிலையில், இருவர் பிறப்பின்போதும் உடனிருந்த ரஷ்யாவைச் சேர்ந்த மகளிர் மருத்துவ நிபுணர் கடந்தாண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

பிரத்தியேக கல்வி

அவர்கள் மூவரும் மொஸ்கோவின் வடமேற்கில் உள்ள வால்டாய் ஏரிக்கு அருகே பாதுகாக்கப்பட்ட மாளிகையில், கிரெம்ளினின் ஃபெடரல் பாதுகாப்பு சேவையின் பாதுகாப்பில் வசிக்கின்றனர்.

புடினின் மறைக்கப்பட்ட ஆடம்பர வாழ்க்கை அம்பலம் : இரகசியமாக வளர்க்கப்படும் இரண்டு மகன்கள் | Russia President Putins Sons Isolated In Luxury

அவர்கள் இருவரும் மழலையர் பள்ளிகளுக்கோ அல்லது பள்ளிகளுக்கோ செல்வதில்லை; மாறாக, அவர்கள் மாளிகையிலேயே பணியமர்த்தப்பட்ட பயிற்சியாளர்களால் கற்பிக்கப்படுகிறார்கள்.

அவர்களிடம் அதிகளவில் பொம்மைகளும் செல்லப்பிராணிகளும் இருந்தாலும், ஒருவருக்கொருவர் அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களுடன் மட்டுமே விளையாட முடியும்.

தங்கள் கோடைகாலத்தை பின்லாந்து வளைகுடா, கருங்கடல் கடற்கரையில் உள்ள ஆடம்பரக் கப்பல்களில், தங்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் மட்டும்தான் செலவிடுகிறார்கள்.

மூத்த மகனுடன் ஹொக்கி விளையாடும் புடின்

அவர்களுக்கென பிரத்யேகமான தனியார் ஜெட் அல்லது கவசப்படுத்தப்பட்ட ரயில் மூலம் பயணிப்பர்.

புடின் சில நேரங்களில், தனது மூத்த மகனுடன் வால்டாய் தோட்டத்தில் ஒரு தனியார் வளையத்தில் ஐஸ் ஹொக்கி விளையாடுவதாகவும் கூறப்படுகிறது.

புடினின் மறைக்கப்பட்ட ஆடம்பர வாழ்க்கை அம்பலம் : இரகசியமாக வளர்க்கப்படும் இரண்டு மகன்கள் | Russia President Putins Sons Isolated In Luxury

ரஷ்யாவுக்கு அனுதாபம் கொண்ட நாடுகளில் இருந்து மட்டுமே ஆங்கில ஆசிரியர்கள் வரவழைக்கப்படுகின்றனர். அங்கு பணிபுரியவிருக்கும் ஊழியர்கள் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு இரண்டு வார தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும்.

ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் தனிப்பட்ட பயிற்சியாளர்களுடன் தனியார் உடற்பயிற்சி வசதிகள், நீச்சல் குளங்கள் முதலான வசதிகள் உள்ளன.

தனிப்பட்ட சமையல்காரர்களால் தயாரிக்கப்பட்ட உணவு, நம்பகத்தன்மையான பணியாளர்களால் வழங்கப்படுகிறது.

அவர்கள் பனிச்சறுக்கு கற்றலுடன் கூடுதலாக ஜெர்மன் மொழியையும் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.

ரஷ்ய புலனாய்விடம் இவானின் படங்கள் இருந்தாலும், பாதுகாப்பு நெறிமுறை காரணங்களுக்காக அவற்றை வெளியிட வேண்டாம் என்று கூறியது.

பொதுவாக உளவாளிகள் மற்றும் அரசாங்க பாதுகாப்பு கொண்ட நபர்களுக்குப் பயன்படுத்தப்படும் சிறப்பு ஆவணங்கள், புடினின் மகன்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

https://www.youtube.com/embed/ctIuu3JqC5k

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.