Courtesy: Sivaa Mayuri
எதிர்வரும் தேர்தல்கள் யார் என்ன சொன்னாலும் குறித்த நேரத்தில் நடத்தப்படும் என ஜனாதிபதியின் தலைமை அதிகாரியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகருமான சாகல ரத்நாயக்க (Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.
கொலன்னாவில் இன்று (12.06.2024) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்தாமல் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் எனக் கூறியுள்ளார்.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் எனத் தெரிவித்த அவர், ஏனைய கட்சிகளிடமும் ஆதரவைப் பெறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐக்கிய தேசியக்கட்சியின் பலரும் ரணில் விக்மசிங்க தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறுகின்றபோதும், கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார மாத்திரமே ஜனாதிபதி தேர்தல் இரண்டு வருடங்களுக்கு தள்ளிப்போகவேண்டும் என்று கருத்தையும் வெளியிட்டிருந்தார்.