அட்லீயின் அடுத்த படம்
இயக்குநர் அட்லீ கடைசியாக ஜவான் படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கொடுத்தார். இதன்பின், இவருடைய அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. ஆனால், தொடர்ந்து பல்வேறு தகவல்கள் மட்டும் வெளியாகிறது. அதில் அல்லு அர்ஜுன் உடன் தான் அட்லீ அடுத்ததாக படம் பண்ண போகிறார் என கூறப்படுகிறது.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறார்கள் என்றும் தெரிவிக்கின்றனர். ஆனால், இதில் யாரும் எதிர்பார்க்காத செம ட்விஸ்ட் நடந்துள்ளது. இதுவரை இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கப்போகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் இசையமைக்கவில்லை என சொல்லப்படுகிறது.
கங்குவா படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கும் படம்! விஜய் சேதுபதி தான் ஹீரோவா..?
புதிய இசையமைப்பாளர்
இப்படத்திற்கு இளம் சென்சேஷனல் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் தான் இசையமைக்கிறாராம். பலநூறு கோடி பஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் அல்லது ஏ.ஆர். ரஹ்மான் போன்றோர் இசையமைப்பாளர்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளம் சென்சேஷன் சாய் அபயங்கர் பெயர் அடிபடுகிறது.
இணையத்தில் இப்படியொரு தகவல் பரவி வந்தாலும், இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாய் அபயங்கர் கைவசம் தற்போது பென்ஸ், சூர்யா 45 ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.