வாழ்க்கை வரலாறு படம்
கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு சமீபகாலமாக படங்கள் உருவாகி வருகிறது.

எம்.எஸ். தோனி, நடிகை சாவித்திரி மகாநட்டி, சூரரைப் போற்று, தலைவி போல் பல நட்சத்திரங்களின் வாழ்க்கை வரலாறு படம் இந்திய சினிமாவில் வெளியாகியுள்ளது.

சினிமாவில் நாயகியாக அறிமுகமாகும் நாட்டாமை பட டீச்சர் மகள்… யாருடன் நடிக்கிறார் பாருங்க
எம்.எஸ். சுப்புலட்சுமி – சாய் பல்லவி
இந்த நிலையில், தற்போது கர்நாடக இசைக்கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தெலுங்கு வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதில் எஸ்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


