ஆதிபுருஷ்
இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ்.
இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் தயாராகி வெளியாகி இருந்தது.
ஆனால் படத்திற்கு நல்ல விமர்சனமும் வரவில்லை, பாக்ஸ் ஆபிஸிலும் சொதப்பியது.

சயீப் அலிகான்
ஆதிபுருஷ் படத்தில் நடித்த சயீப்அலிகான் சமீபத்திய ஒரு பேட்டியில், நான் நடித்த ஆதிபுருஷ் படத்தை எனது மகனுக்கு காட்டினேன். சிறிது நேரத்தில் அவன் என்னை பார்த்தான், மன்னித்துவிடு என்றேன்.

பரவாயில்லை என்றான், பிறகு என்னை மன்னித்துவிட்டான் என கூறியுள்ளார்.


