Courtesy: Sivaa Mayuri
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுடன்(Anura Kumara Dissanayake) இம்மாதம் 6 ஆம் திகதியன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் திட்டமிடப்பட்ட விவாதத்தை தவிர்த்துவிட்டார் என்று தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் தற்போது பிரேமதாச இப்போது விவாதம் பற்றி மாணவர்களுக்கு முன்னால் சென்று பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ கோரியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
தமது கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும், சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் இனி விவாதம் எதுவும் இல்லை என அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.
முன்னதாக சஜித் பிரேமதாச முன்மொழிந்த ஜூன் 6 ஆம் திகதி விவாதத்திற்கு தேசிய மக்கள் சக்தி இணக்கம் வெளியிட்டது.
எனினும் அவர் அதனை தவிர்த்துவிட்டார்.
இதனால் அவர் ஒரு விவாதத்தைக்கூட எதிர்கொள்ள முடியாத தலைவர் என்பது மக்களுக்குத் தெரியவந்துள்ளது.
எனவே குறித்த விவாதம் தொடர்பாக மாணவர்களுக்கு முன்னால் சென்று எதனையும் பேசவேண்டாம் என்று தாம் சஜித்திடம் கோருவதாக ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில், நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் இரண்டு ஊடக நிறுவனங்களால் முன்மொழியப்பட்ட ஜூன் 27 மற்றும் செப்டம்பர் 10 ஆகிய இரண்டு விவாதங்களில் பங்கேற்க இணக்கம் தெரிவித்துள்ளனர்
இந்தநிலையில் இலங்கையர்கள் இங்கும் அதே போன்ற விவாதத்தை எதிர்பார்த்தனர் என்று நலிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார்.