அரசியல் விவாதம் ஒன்றுக்காக தேசிய மக்கள் சக்தி முன்மொழிந்துள்ள நாட்களில் சஜித் பிரேமதாசவுக்கு(Sajith Premadasa) வேறு அலுவல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் அரசியல் தொடர்பான பகிரங்க விவாதமொன்றுக்கு எதிர்வரும் மே மாதம் 07,09,13 மற்றும் 14 ஆகிய நாட்களில் ஒரு திகதியை தேர்ந்தெடுத்து அறிவிக்குமாறு தேசிய மக்கள் சக்தி கடிதம் மூலமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு(Ranjith Madduma Bandara) அறிவித்திருந்தது.
யாழில் பெண்ணொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய கும்பல்: பொலிஸார் விசாரணை
நேரடி விவாதம்
எனினும் குறித்த தினங்களை முன்னதாகவே வேறு அலுவல்களுக்காக எதிர்க்கட்சித் தலைவர் ஒதுக்கிக் கொண்டுள்ளதால் அதற்குப் பதிலாக எதிர்வரும் 25ஆம் திகதி அல்லது 26 ஆம் திகதிகளில் குறித்த விவாதத்தை வைத்துக் கொள்ள முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நளின் பண்டார எம்.பி(Nalin Bandara) தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரு கட்சிகளின் தலைவர்கள் மட்டுமன்றி, கட்சிகளின் பொருளாதார ஆலோசனைக் குழுக்களும் நேரடி விவாதம் ஒன்றில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் வாகன விபத்து: இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
யாழில் பெண்ணொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய கும்பல்: பொலிஸார் விசாரணை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |