முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதியை நிலை நாட்டாத சஜித் : சிறிலங்கா ஜனநாயக கட்சி சுட்டிக்காட்டு

சஜித் பிரேமதாச (Sajith Premadasa) அமைச்சராக இருந்த போது தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்தது, அப்போது அவர் ஏன்
நீதியை நிலைநாட்டவில்லை என சிறிலங்கா ஜனநாயக கட்சியின் (SLDP) தலைவர் அன்வர் எம். முஸ்தபா (Anvar M.Musthafa) கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜனாதிபதியை ஆதரித்து அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”எங்களின் சகோதர இனமான கிறிஸ்தவ சமூகம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டு
நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

அரசியல் தலைமைகளே பொறுப்பு

அதற்கு இந்த இலங்கையில் வாழும் அனைத்து
அரசியல் தலைமைகளும், அன்றைய ஆளும்தரப்பாக இருந்து இப்போது எதிர்க்கட்சியில்
இருக்கின்றவர்களும் கூட பொறுப்புக்கூற வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதியை நிலை நாட்டாத சஜித் : சிறிலங்கா ஜனநாயக கட்சி சுட்டிக்காட்டு | Sajith Did Not Bring Justice To The Easter Attack

இன்று எதிர்க்கட்சித் தலைவராக
இருக்கும் சஜித் அந்தக் காலத்தில் ஆளும் தரப்பில் ஒரு அமைச்சர். ஜனாதிபதி வேட்பாளராக இருந்து கொண்டு நீதியை நிலைநாட்டப் போவதாக கூறும் அவர்
உட்பட பொறுப்புக்கூற வேண்டிய நிறைய பேர் இருக்கின்றார்கள். ஆகவே அனைவரும்
பொறுப்புக்கூற வேண்டும். 

நாங்கள் ஜனாதிபதியுடன் செய்த ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளில், எதிர்வரும் காலங்களில் இன,மத பேதமற்ற
அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தையும் அதற்கான கள
நிலைமையும் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டோம். கடந்த
காலங்களில் சில அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு நாட்டில் பல
அசம்பாவிதங்கள் நடத்தப்பட்டது.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் 

சிறிலங்கா ஜனநாயக கட்சியை பொறுத்தவரையில் ஏனைய கட்சிகளைப் போன்று சமூக
விடயங்களை மழுங்கடித்து நாட்டை சீரழிப்பது போன்றில்லாது பாதிக்கப்பட்ட
மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு பேச்சுவார்த்தைகளை செய்வதற்கு
தான் எங்களுடைய கட்சி ஜனாதிபதியின் தரப்பில் ஆதரவாக இருக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான நீதியை நிலை நாட்டாத சஜித் : சிறிலங்கா ஜனநாயக கட்சி சுட்டிக்காட்டு | Sajith Did Not Bring Justice To The Easter Attack

அதுபோல
மக்களின் நிலப் பிரச்சினைகள் சம்பந்தமாக ஜனாதிபதியிடம் பேசியிருக்கிறோம். அனைத்து சமூகத்தினரும் நிர்வாக ரீதியில் கட்டமைப்பை எடுத்துச் செல்ல
வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டோம்.

ஆகவே இது சம்பந்தமாக எதிர்வரும்
காலங்களில் சிறிலங்கா ஜனநாயக கட்சி ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதன்
பின்னர் சில வேண்டுகோள்களை முன் வைப்பதற்கும் தயாராக இருக்கின்றோம்“ என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.