தனது சகல கல்வித் தகைமைகளையும் சமர்ப்பிக்க தயாரென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், நாளைய தினம் (18) நாடாளுமன்றத்தில் தனது கல்வித்தகைமைகளை சமர்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (17) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
கல்வித் தகுதி
எதிர்க்கட்சித் தலைவரின் கல்வித் தகுதியைக் காட்டுமாறு அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே சஜித் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாளை காலை, நான் பெற்ற அனைத்து கல்வித் தகுதிகளையும் இந்த சட்டசபையில் சமர்ப்பிக்க உள்ளேன்.
பட்டச் சான்றிதழ் மட்டுமல்ல அதைத் தாண்டி அனைத்து உறுதிமொழிகளும் முன்வைக்கப்படுகின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.