வடக்கில் மாகாண சபை முறைமை அமைவதை கடுமையாக எதிர்த்தவர் சஜித்தின் தந்தை ரணசிங்க பிரேமதாச என மொட்டுவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக ஹட்டன் திக் ஓயா மாநகர சபை மண்டபத்தில் நேற்று (16) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே எஸ்.பி.திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் மக்களுக்கு சஜித் ஒன்றுமே செய்யமாட்டார்
சஜித்தின் தந்தை , தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யாத தலைவர், அதேபோன்று தமிழ் மக்களுக்காக அவரது மகன் சஜித்தும் எதையும் செய்யப்போவதில்லை.
ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் சஜித் பிரேமதாச மக்களுக்கு வாக்குறுதியளித்த விடயங்களை வழங்குவதற்கு மேலதிகமாக நாற்பதாயிரம் கோடி ரூபாவை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தவறுதலாக நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றால்
சஜித் பிரேமதாச எதிர்வரும் 22ஆம் திகதி தவறுதலாக நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றால், அவருக்கு இந்த பணம் தேவைப்படும் என அவர் குறிப்பிட்டார்.
2015ஆம் ஆண்டு அவர் வீடமைப்பு அமைச்சரானார், அது நான் உருவாக்கிய அமைச்சு, அந்த அமைச்சிடம் போதுமான பணம் உள்ளது, வீடற்ற ஒருவருக்கு நாட்டில் எங்கும் வீடு கட்டிக்கொடுக்க முடியும் என தோட்டத்தில் வீடு கட்டியவர் சஜித் பிரேமதாச என அவர் மேலும் தெரிவித்தார்.