எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர்
கார்மென் மொரேனோவுடன், இன்று, GSP+ என்ற பொதுவான முன்னுரிமை சலுகைத் திட்டம்
குறித்து கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள, பரஸ்பர வரிகளைத்
தொடர்ந்து, GSP+ இன் முழு பயன்பாட்டை மையமாகக் கொண்டு, இதன்போது விவாதங்கள்
நடத்தப்பட்டதாக பிரேமதாச, தமது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய ஏற்றுமதி வாய்ப்புகளைத் திறக்க ஐரோப்பிய ஒன்றியம் போன்ற
கூட்டாளர்களுடன், இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தை அவர்
எடுத்துரைத்துள்ளார்.
புதிய ஏற்றுமதி வாய்ப்புகள்
GSP+ திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள போதும், இலங்கை அதனை முழுமையாகப் பயன்படுத்துகிறோமா என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்க கட்டணங்கள் வரும்போது, அபாயங்களை நிர்வகிக்க மட்டுமல்ல, புதிய ஏற்றுமதி வாய்ப்புகளைத் திறக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற கூட்டாளர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

