உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியாக செயற்பட்டவர்களுக்கு பாரபட்சம் இல்லாமல் உரிய தண்டனை வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கர்தினால்களுக்கு உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் (Colombo), இன்று (11.09.2024) இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், கர்தினால் மல்கம் ரஞ்சித்திற்கும் (Cadinal Malcom Ranjith) இடையிலான சந்திப்பின் போதே மேற்படி உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
விசேட சந்திப்பு
இதன்போது, சஜித் பிரேமதாச, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முறையாக நியமிக்கப்பட்ட நீதித்துறை நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், நீதித்துறை நடைமுறையை மீட்டெடுக்க அவர் பாடுபடுவதாகவும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவும் கர்தினாலிடம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கவுள்ளதாகவும் அதற்கு மூளையாக செயற்பட்டவர்களை தரம் பாராமல் தண்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.