முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே மற்றும் முன்னாள் மாகாண
அமைச்சர் சம்பிக்க விஜேரத்ன ஆகியோர், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து
விலகியுள்ளனர்.
இருவரும் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
பதவி விலகலுக்கான காரணம்
ரஞ்சித் அலுவிஹார, ரத்தொட்ட தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்தும், கட்சியின்
துணை தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
எனினும் அவரின் பதவி விலகலுக்கான காரணம் வெளியாகவில்லை.
அதேநேரம், முன்னாள் மாகாண அமைச்சரும், சம்பிக்க விஜேரத்ன, தம்புள்ள தொகுதி
அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கட்சித் தலைமை
தம்புள்ள தொகுதியின் அரசியல் முடிவுகளில், கட்சித் தலைமையின் ஒருதலைப்பட்ச
அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தே தாம் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், ஐக்கிய மக்கள் சக்தியின்
பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த
விஜேசிறி விலகினார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.