அரசாங்கத்துக்கு எதிரான வலுவான எதிர்க்கட்சிக் கூட்டணியொன்றை உருவாக்குவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்பீடம் கவனம் செலுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தின் போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உயர்பீடம் முன்வைத்த ஆலோசனைக்கு
அதன் பிரகாரம் எதிர்க்கட்சியின் சகல கட்சிகளுடனும் புரிந்துணர்வு அடிப்படையில் இணக்கப்பாட்டொன்றை ஏற்படுத்திக் கொள்ளவும், ஏனைய கட்சிகளுடன் கூட்டிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன்போது நீண்ட நேரம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மணிநேர வாதப் பிரதிவாதங்களின் பின்னர் உயர்பீடம் முன்வைத்த ஆலோசனைக்கு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச ஓரளவுக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.