எமது பயணத்தில் தேசிய ஒற்றுமையே பிரதான இலக்காகும். இன, மத, குல, கட்சி
பேதங்களை கடந்து தேசிய கொள்கை திட்டத்துடன் முன்னோக்கிச் செல்வோம் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கும் மதங்களுக்கும் உள்ள உரிமைகளை
பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு (Batticaloa) ஏறாவூர் நகரில் நேற்று (26) இடம்பெற்ற 18 ஆவது வெற்றிப் பேரணியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் சமூகம்
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து அரசாங்கம் இனவாதத்தை தோற்றுவித்த போது ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாமே அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.
கொரோனா காலத்தில் ஜனாஸாக்களை எரிப்பதா புதைப்பதா என்கின்ற பிரச்சினை தோன்றிய
போது முஸ்லிம் மக்களுடைய நல்லடக்கத்திற்கான உரிமைக்காக ஐக்கிய மக்கள் சக்தி
முன்நின்றது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகமைய நல்லடக்கம் செய்ய முடியும் என்ற
நிலைப்பாடு வந்தபோது நாமும் எமது உறுப்பினர்களும் அதற்கு ஆதரவாக இருந்தோம்.
இனவாதத்தையும் மதவாதத்தையும் அடிப்படைக் கொள்கையாக கொண்டு அரசாங்கம்
செயல்பட்டது ” என்றார்.