தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவை தோற்கடிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் முடியாது என்பதை கூற விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மத்துகமையில் நேற்றையதினம் (05.09.2024) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“எமது நாட்டின் வரலாற்றில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எவரும் மூன்றாவதாக எந்த தலைவரையும் வளர்த்து விடமால் ஆளும் அரசாங்கத்துடன் போட்டியிட்டனர்.
ஐக்கிய தேசிய கட்சி
ஆனால், சஜித் இன்று எதிர்க்கட்சித் தலைவராக என்ன செய்துள்ளார்? அவர் அநுரகுமார திசாநாயக்க வளர்வதற்கு இடமளித்துள்ளார்.
எனவே, சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பது அநுரவிற்கு ஒட்சிசன் அளிப்பதை போன்றது ஆகும்.
சஜித்தால் ஒருபோதும் அநுரவை தோற்கடிக்க முடியாது. அத்துடன், அவர் ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவுமில்லை.
ஜே.ஆர். ஜெயவர்த்தன மற்றும் ரணசிங்க பிரேமதாசவிற்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தியது நான் தான்” எனத் தெரிவித்துள்ளார்.