தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
பெருந்தலைவருமான இரா.சம்பந்தன்(R. Sampanthan) எம்.பியின் மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாஸ இரங்கல் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
நாட்டின் ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாட்டுக்காகத் தொடர்ந்து முன்னிருந்த இரா.
சம்பந்தனின் திடீர் மரணம் தொடர்பில் தனது கவலையைத் தெரிவிப்பதாக
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது
தெரிவித்தார்.
சம்பந்தனின் மரணம் பாரிய இழப்பு
அவர் மேலும் கூறுகையில்,
“சம்பந்தனின் மரணம் எமது நாட்டுக்கும் மக்களுக்கும் பாரிய இழப்பாகும். அவர்
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேசியத் தலைவராகச் செயற்பட்டார்.
தேசியத்துவம் தொடர்பில் அவர் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்தார்.
அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இன, சமய, குல பேதமின்றி சகலரையும் ஒரே
மாதிரியாக மதித்து பழகிய தலைவராவார் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் இன்று பொரளை கொழும்பு – பொரளை
ஏ.எவ்.றேமண்ட்ஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் நிலையில்,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அங்கு சென்று சம்பந்தனின்
புகழுடலுக்குத் தனது மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்தினார்.