நுகேகொடையில் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அநுர அரசுக்கு
எதிரான பேரணியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது
என்று அந்தக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சுஜீவ சேனசிங்க ஊடகங்களிடம்
தெரிவித்துள்ளார்.
எனினும், அநுர அரசின் ஒடுக்குமுறை மற்றும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளுக்கு
எதிராக எதிரணிகளுடன் இணைந்து பயணிக்கக் கூடிய இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தி
இணைந்து செயற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அநுர அரசின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு
எதிராகவே எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் பேரணியை நடத்துவதற்கு
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
என்பன திட்டமிட்டுள்ளன.

